மாரிக்குப்பம் அருகே முட்புதராக காட்சி அளிக்கும் போலீஸ் குடியிருப்பு


மாரிக்குப்பம் அருகே முட்புதராக காட்சி அளிக்கும் போலீஸ் குடியிருப்பு
x

மாரிக்குப்பம் அருகே போலீஸ் குடியிருப்பு முட்புதராக காட்சி அளிக்கிறது. இதையடுத்து முட்புதரை அகற்ற கோரி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:

மாரிக்குப்பம் அருகே போலீஸ் குடியிருப்பு முட்புதராக காட்சி அளிக்கிறது. இதையடுத்து முட்புதரை அகற்ற கோரி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் குடியிருப்பு

கோலார் மாவட்டம் மாரிக்குப்பத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. அங்கு பணியாற்றும் போலீசாருக்கு அன்காக்ஸ் பிளாக்கை ஒட்டி குடியிருப்புகள் கட்டப்பட்டன. போலீஸ் நிலையத்தை புதுப்பிக்க வேண்டி போலீஸ் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டது.

இதனால் குடியிருப்பில் ஒரு வீட்டில் போலீஸ் நிலையம் இயங்கி வந்தது. இந்த நிலையில் மாரிக்குப்பம் போலீஸ் நிலையம் ரத்து செய்யப்பட்டு பங்காருபேட்டை தாலுகா பூதிகோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

போலீசார் கோரிக்கை

ஆனாலும் மாரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார், புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். தற்போது அந்த குடியிருப்புகளை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. அங்கு வசிக்கும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பீதியில் உள்ளனர்.

இதை கோலார் தங்கவயல் மாவட்ட போலீஸ் நிர்வாகமோ அல்லது நகரசபை நிர்வாகமோ கண்டு கொள்ளவில்லை. உடனே, போலீசார் குடியிருப்பு பகுதியில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்.


Next Story