மராட்டியம்: பல்கலை கழகத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்ட மத்திய மந்திரி


மராட்டியம்:  பல்கலை கழகத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்ட மத்திய மந்திரி
x

மராட்டியத்தில் பல்கலை கழகத்தின் விளையாட்டு வளாக பெயர் சூட்டு விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாகுர் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டார்.

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் உள்ள சாவித்திரிபாய் புலே புனே பல்கலை கழகத்தில் அமைந்துள்ள விளையாட்டு வளாகம் ஒன்றிற்கு மல்யுத்த வீரர் கே.டி. ஜாதவ் அவர்களின் பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாகுர் கலந்து கொண்டார். அவர் அதற்கான கல்வெட்டை திறந்து வைத்து, அங்கிருந்த மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

இதனை தொடர்ந்து, அவர் பல்வேறு விளையாட்டு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நடைபயிற்சிக்கான சாதனத்தில் அவர் சிறிது நேரம் பயிற்சி மேற்கொண்டார். துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டார். அவருக்கு, உடனிருந்த பயிற்சியாளர்கள் குறிபார்த்து சுடுவது பற்றிய பயிற்சி முறைகளை விளக்கினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி தாகுர், 27 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டு வளாகம் அமைந்துள்ளது. இதில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன.

உலக தரம் வாய்ந்த துப்பாக்கி சுடுதலுக்கான மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் நல்ல முறையிலான பயிற்சியின் கீழ் சிறந்த வசதிகளை பெறுவார்கள். நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற சிறந்த வசதிகள் வரவுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.


Next Story