தேர்தல் பிரசாரத்திற்காக இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு


தேர்தல் பிரசாரத்திற்காக இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு
x

நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 18ம் தேதி வரை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story