தங்க நகைகளுக்கு கட்டாய ஹால்மார்க் முத்திரை: புதிய உத்தரவு
கட்டாய ஹால்மார்க்கின் கீழ் வரும் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 343 ஆக உள்ளது.
புதுடெல்லி,
தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரை (3-வது திருத்தம்) உத்தரவு- 2023-ன் மூலம் கட்டாய ஹால்மார்க் முத்திரையிடுவதன் 3-ம் கட்ட உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த 3-ம் கட்ட உத்தரவில் கூடுதலாக 55 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில், நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும். இதன் மூலம் கட்டாய ஹால்மார்க்கின் கீழ் வரும் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 343 ஆக உள்ளது.
கட்டாய ஹால்மார்க் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, பதிவு செய்யப்பட்ட நகைக்கடைகளின் எண்ணிக்கை 34,647-ல் இருந்து 1,81,590 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளுக்கு எச்.ஐ.டி ஹால்மார்க் முத்திரையிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story