வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை - மகிந்த ராஜபக்சே உறுதி


வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை - மகிந்த ராஜபக்சே உறுதி
x

கோப்புப்படம்

வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் கடந்த 9-ந்தேதி அதிபர் மாளிகைக்குள் நுழைந்து சூறையாடினர். நிலைமை கைமீறி போனதை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பி செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். ஆனால் அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவும் இன்னும் இலங்கையில் தான் உள்ளனர். அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரிக்கப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம் என ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்துள்ளனர்.

இதனிடையே ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story