'சர்வாதிகார காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது' - டெல்லி முதல்-மந்திரி அதிஷி


சர்வாதிகார காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது - டெல்லி முதல்-மந்திரி அதிஷி
x

சர்வாதிகார காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது என டெல்லி முதல்-மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி முதல்-மந்திரி அதிஷி இன்று டெல்லி சட்டமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள். அவரைப் போன்ற ஒரு மனிதர் உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. அவர் அன்பு மற்றும் அமைதியின் முலம் சத்தியாகிரக கொள்கையை போதித்தார். சத்தியத்தை காக்கவும், அநீதியை எதிர்த்து போராடவும் மக்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார். தற்போதைய சர்வாதிகார காலகட்டத்தில், மகாத்மா காந்தியின் சத்தியாகிரக கொள்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story