அரசு ஊழியர்கள் இனி 'ஹலோவிற்கு' பதிலாக 'வந்தே மாதரம்' சொல்ல வேண்டும்- மராட்டிய அரசு உத்தரவு


அரசு ஊழியர்கள் இனி ஹலோவிற்கு பதிலாக வந்தே மாதரம் சொல்ல வேண்டும்- மராட்டிய அரசு உத்தரவு
x

Image Courtesy: PTI 

தினத்தந்தி 2 Oct 2022 4:32 PM IST (Updated: 2 Oct 2022 4:33 PM IST)
t-max-icont-min-icon

இந்த உத்தரவு இன்று முதல் மராட்டிய மாநிலத்தில் அமலுக்கு வருகிறது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவா சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளுக்கு, `ஹலோ' என்று கூறாமல் `வந்தே மாதரம்' என்று கூறவேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதற்கான அரசின் தீர்மானத்தை மாநில பொது நிர்வாகத் துறை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதமே, மராட்டிய கலாசார துறை மந்திரி சுதிர் முங்கந்திவார் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்டுள்ள தீர்மானத்தில், 'ஹலோ' என்று கூறாமல் `வந்தே மாதரம்' என்று கூறவேண்டும் என்பது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்தந்த அரசு துறைகளின் மேல் அதிகாரிகள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு பேச ஊக்குவிக்க வேண்டும் என்று என கூறப்பட்டுள்ளது.

'ஹலோ' என்பது மேற்கத்திய கலாச்சாரத்தை சித்தரிப்பதாகவும், அந்த வார்த்தைக்கு குறிப்பிட்ட அர்த்தம் எதுவும் இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"வந்தே மாதரம்" என்று கூறி மக்களை வாழ்த்துவது பாச உணர்வை உருவாக்கும் என்வும் அதை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.


Next Story