காயங்களை காட்டுவதற்காக கற்பழிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை கழற்ற கூறிய நீதிபதி: பாய்ந்த வழக்கு


காயங்களை காட்டுவதற்காக கற்பழிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை கழற்ற கூறிய நீதிபதி:  பாய்ந்த வழக்கு
x

கோப்புப்படம்

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹின்டாவுன் நகரை சேர்ந்த தலீத் பெண் ஒருவர் கடந்த மாதம் 19-ந்தேதி மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு ஹின்டாவுன் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 30-ந்தேதி ஹின்டாவுன் நகர கோர்ட்டின் நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது நீதிபதி காயங்களை காட்டுவதற்காக ஆடைகளை கழற்றும்படி அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறினார். பின்னர் இது தொடர்பாக நீதிபதி மீது அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஹின்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தானில் கூட்டு பலாத்காரத்தில் இருந்து தப்பிய பெண்ணை ஆடையை உடைக்கக் கூறியதாக மாஜிஸ்திரேட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

1 More update

Next Story