நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
Live Updates
- 26 April 2024 6:08 PM IST
2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஒருசில அசம்பாவிதங்கள் தவிர்த்து 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத்தொகுதிகளுக்கான ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14- முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராஜஸ்தான் - 13, மராட்டியம் -8, உத்தர பிரதேசம் -8, மத்திய பிரதேசம் - 6, மேற்கு வங்காளம் - 3, அசாம் - 5, பீகார் -5 , சத்தீஸ்கார் -3, ஜம்மு, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியில் தேர்தல் நிறைவு பெற்றது. மணிப்பூரில் உள்ள உக்ரூல் மாவட்டத்தில் 2 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. தொடர்ந்து, 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெறுகிறது.
- 26 April 2024 5:52 PM IST
2ம் கட்ட வாக்குப்பதிவு - மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்
✦ அசாம் - 70.66%
✦ பீகார் - 53.03%
✦ சத்தீஸ்கார் - 72.13%
✦ ஜம்மு & காஷ்மீர் - 67.22%
✦ கர்நாடகா - 63.90%
✦ கேரளா - 63.97%
✦ மத்தியப் பிரதேசம் - 54.58%
✦ மராட்டிம் - 53.51%
✦ மணிப்பூர் - 76.06%
✦ ராஜஸ்தான் - 59.19%
✦ திரிபுரா - 76.23%
✦ உத்தரப் பிரதேசம் - 52.64%
✦ மேற்கு வங்காளம் - 71.84%
- 26 April 2024 4:42 PM IST
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - நடிகர் சிவராஜ் குமார்
பெங்களூருவில் வாக்களித்த பின் நடிகர் சிவராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வாக்களிப்பது அனைவரின் உரிமை. வாக்களிக்கும் போது, கேள்வி கேட்க நமக்கு முழு உரிமை உள்ளது. மக்களின் பதில் நன்றாக உள்ளது. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.
- 26 April 2024 4:32 PM IST
கேரளா எர்ணாகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக நின்று தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் மம்மூட்டி.
- 26 April 2024 3:58 PM IST
2-ம் கட்ட வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம்
* அசாம் - 60.32%
* பீகார் - 44.24%
* சத்தீஷ்கர் - 63.92%
* ஜம்மு & காஷ்மீர் - 57.76%
* கர்நாடகா - 50.93%
* கேரளா - 51.64%
*மத்தியபிரதேசம் - 46.50%
* மராட்டியம் - 43.01%
*மணிப்பூர் - 68.48%
* ராஜஸ்தான் - 50.27%
* திரிபுரா - 68.92%
* உத்தரபிரதேசம் - 44.13%
* மேற்கு வங்கம் - 60.60%
- 26 April 2024 3:03 PM IST
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில், பகல் 2.30 மணி நிலவரப்படி 46.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 26 April 2024 2:28 PM IST
2ம் கட்ட வாக்குப்பதிவு - 1 மணி நிலவரம்
அசாமில் 46.31%, பீகாரில் 33.80%, சத்தீஸ்காரில் 53.09%, ஜம்மு காஷ்மீர் - 42.88%
கர்நாடகா - 38.23%, கேரளா - 39.26%, மத்தியப்பிரதேசம் - 38.96%, மராட்டியம் - 31.77%
மணிப்பூர் - 54.26%, ராஜஸ்தான் - 40.39%, திரிபுரா - 54.47%, உ.பி. 35.73%, மேற்கு வங்காளம் - 47.29%
இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 51.50% வாக்குப்பதிவாகி உள்ளது.
- 26 April 2024 12:12 PM IST
2-ம் கட்ட வாக்குப்பதிவு - 11 மணி நிலவரம்
அசாமில் 27.43%, பீகாரில் 21.68%, சத்தீஸ்கரில் 35.47%, ஜம்மு காஷ்மீர் - 26.61%
கர்நாடகா - 22.34%, கேரளா - 25.61%, மத்தியப்பிரதேசம் - 28.51%, மகாராஷ்டிரா - 18.83%
மணிப்பூர் - 33.22%, ராஜஸ்தான் - 26.84%, திரிபுரா - 36.42%, உ.பி. 24.31%, மேற்கு வங்கம் - 31.25%
இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குப்பதிவு