சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதி
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக மேலும் 5 புதிய திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதித்துள்ளது.
சபரிமலை,
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக மேலும் 5 புதிய திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அப்பம் மற்றும் மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது.
மாளிகபுரம் - சந்திரானந்தன் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, அவசர காலங்களில் பாதுகாப்பு வழித்தடமாக பயன்படுத்தப்பட உள்ளது. சபரிமலையில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, குன்னுார் அணையில் இருந்து, குழாய் பதிக்கும் திட்டம், 2 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், வெள்ளம் வந்தாலும் சபரிமலை யாத்திரைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பம்பா நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.
மேலும், நிலக்கல் அடிவாரத்தில் 8 கோடி ரூபாயில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.