கேரளா: கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 303 கிலோ தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 270 கிலோ தங்கத்தை விமான நிலையத்திற்குள் வைத்து பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை கடத்த முயற்சிக்கும் நபர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் 191 கோடி ரூபாய் மதிப்பிலான 303 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 270 கிலோ தங்கத்தை விமான நிலையத்திற்குள் வைத்து பறிமுதல் செய்ததாகவும், 33 கிலோ தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியில் வைத்து பறிமுதல் செய்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story