கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை,

முன்னாள் மத்திய நிதி மந்திரி பா.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், தன்னுடைய பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தரும்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மனுதாரர் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், 10 ஆண்டுகள் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது. ஓராண்டுக்கு புதுப்பிக்கப்படும் என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் வக்கீல் ஏ.கோவிந்தராஜ் ஆஜராகி, பாஸ்போர்ட் சட்ட விதி 12-ன் படி 10 ஆண்டுகள் புதுப்பித்து தரவேண்டும். ஆனால் வேண்டுமென்றே அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர் என்று வாதிட்டார். இதை ஏற்று இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story