கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு ; சித்தராமையா நிதி, சிவகுமார் நீர்ப்பாசனம்
முதல்- மந்திரி சித்தராமையா- நிதி, ஐடி-பிடி, உளவுத்துறை, செய்தி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை
பெங்களூரு
கர்நாடக மந்திரிசபை மே 27 அன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று அன்று அனைத்து அமைச்சர்களுக்கும் இலாகாக்களை ஒதுக்கினார்.
துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாருக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனம் மற்றும் பெங்களூரு நகர மேம்பாடு மற்றும் பெங்களூரு நகரத்தில் உள்ள பிற சிவில் ஏஜென்சிகள், பிற குடிமை அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இரண்டு இலாகாக்களுக்கும் மாநில பட்ஜெட்டில் அதிக அளவு ஒதுக்கீடு கிடைக்கும்.
மந்திரிகள் இலாக்காக்கள் விவரம் வருமாறு:-
முதல்- மந்திரி சித்தராமையா- நிதி, ஐடி-பிடி, உளவுத்துறை, செய்தி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை
டி.கே.சிவக்குமார்- நீர்வளம், பெங்களூரு நகர்ப்புற வளர்ச்சி
பரமேஸ்வராவ்- போலீஸ் துறை கட்டுப்படுத்தும் உள்துறை
எச்.கே. பாட்டில்- சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை, சுற்றுலாத்துறை
கே.எச்.முனியப்பா- உணவுத்துறை
கே.ஜே.ஜார்ஜ் -மின்சாரத்துறை
ராமலிங்க ரெட்டி- போக்குவரத்து துறை
எம்பி பாட்டில் - பெரிய, நடுத்தர தொழில்துறை
தினேஷ் குண்டுராவ்- சுகாதாரத்துறை
மஹா தேவப்பா - மூக நலத்துறை
சதீஷ் ஜார்கிஹோலி- பொதுப்பணித்துறை
கிருஷ்ணா பைரெகவுடா- வருவாய்துறை
பிரியங்க் கார்கே- நகர்புற வளர்ச்சித்துறை
சிவானந்த் பாட்டில்- ஜவுளித்துறை
ஜமீர் அகமது காந் வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை,
மது பங்காரப்பா- தொடக்க மற்றும் மேல்நிலை கல்வித்துறை
ஷரனா பசப்பா-சிறு குறு தொழில்துறை
ஈஸ்வர் கண்ட்ரே- வனத்துறை
செலுவராயசாமி- வேளாண் துறை
ரஹீம் காந் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் துறை