கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட் கிழமை) மீண்டும் கூடுகிறது.
பெங்களூரு:-
வெளிநடப்பு செய்தனர்
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 7-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்தார். சித்தராமையாவின் பதிலால் திருப்தி அடையாத பா.ஜனதா உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி சட்டசபைக்கு சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இன்று பட்ஜெட் மீது விவாதம் நடக்கிறது. துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதிலளிப்பார்கள்
அவ்வாறு துறை வாரியாக விவாதம் நடைபெற்றால், அந்தந்த துறை மந்திரிகள் விவாதத்திற்கு பதிலளிப்பார்கள். இறுதியில் விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளிப்பார். இந்த வாரம் சில சட்ட மசோதாக்களை நிறவேற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி நிறைவடைகிறது.