ஜம்மு காஷ்மீர்: எல்லை பகுதி அருகே பயங்கர ஆயுதங்களை மீட்ட பாதுகாப்புப்படையினர்


ஜம்மு காஷ்மீர்: எல்லை பகுதி அருகே பயங்கர ஆயுதங்களை மீட்ட பாதுகாப்புப்படையினர்
x
தினத்தந்தி 3 Dec 2022 7:23 AM IST (Updated: 3 Dec 2022 7:27 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதி அருகே பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் மீட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் உரி செக்டரில் புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்த பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் நவம்பர் 29, 2022 முதல் டிசம்பர் 1 வரை கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.

இந்த நடவடிக்கையின் போது இரண்டு ஏகே 74 தாக்குதல் துப்பாக்கிகள், இரண்டு சீன துப்பாக்கிகள், இரண்டு ஏகே 74 தாக்குதல் ரைபிள் தோட்டாக்கள், இரண்டு கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 117 ஏகே 74 தாக்குதல் துப்பாக்கி வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து மீட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் எதிரிகளின் திட்டங்களை பாதுகாப்புப்படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.


Next Story