ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பா.ஜ.க. ஆட்சி அமையாது: மெகபூபா முப்தி


ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பா.ஜ.க. ஆட்சி அமையாது: மெகபூபா முப்தி
x

ஜம்மு காஷ்மீரில் எந்த அரசு அமைந்தாலும் பி.டி.பி. முக்கிய காரணியாக இருக்கும் என மெகபூபா முப்தி கூறினார்.

ஜம்மு:

பி.டி.பி. கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி, ஜம்முவில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் இடையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பா.ஜ.க. ஆட்சி அமையாது, மதச்சார்பற்ற அரசுதான் அமையும். ஜம்மு காஷ்மீரில் எந்த அரசு அமைந்தாலும் பி.டி.பி. முக்கிய காரணியாக இருக்கும். பி.டி.பி.யின் ஆதரவு இல்லாமல் மதச்சார்பற்ற அரசு அமைக்க முடியாது.

பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எங்களின் நோக்கம். ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க.வை அதிகாரத்திற்கு வர விடாமல் வெளியே வைக்கும் வகையில் மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்க பி.டி.பி. ஆதரவு அளிக்கும்.

இந்த தேர்தலில் 50 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவதாகவும், ஜம்மு பிராந்தியத்தைச் சேர்ந்தவர் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் பா.ஜ.க. கூறுகிறது. ஜம்முவைச் சேர்ந்தவரை முதல்வராக முன்னிறுத்துவதாக இருந்தால் ஜம்முவைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமித்திருக்க வேண்டும். இந்த தேர்தலில் 15 தொகுதிகளைக் கூட அவர்கள் தாண்டமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story