மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய ஐ.டி. ஊழியர்; மைத்துனியையும் ஆசைக்கு இணங்க தொல்லை கொடுத்தது அம்பலம்
சம்பிகேஹள்ளி பகுதியில், தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கியதுடன், அதை வீடியோவாக பதிவு செய்து மைத்துனியை ஐ.டி. ஊழியர் படுக்கைக்கு அழைத்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பிகேஹள்ளி:
நண்பர்களுடன் உல்லாசம்
பெங்களூரு சம்பிகேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜான் பால். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் தனது வீட்டில் நண்பர்களை அழைத்து மது விருந்து நடத்தி நடத்தி வந்துள்ளார். மேலும், அவர் தனது மனைவியை, நண்பர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதனால் ஆதிர்ச்சி அடைந்த பெண், அதற்கு மறுத்துள்ளார். எனவே ஆத்திரமடைந்த ஜான், தனது மனைவியை கடுமையாக அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும், தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கவில்லை என்றால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன பெண், அவர் கூறியவாறு, வீட்டிற்கும் வந்த கணவரின் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே மனைவி நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் வீடியோவாக ஜான் பால் பதிவு செய்து வைத்திருந்தார். அவர் அந்த வீடியோக்களை மனைவியின் சகோதரியிடம் (மைத்துனி) காண்பித்து, தனது ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார். மேலும் தன்னுடன் உல்லாசமாக இருக்கவில்லை என்றால், உனது அக்காள் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
வீட்டில் கஞ்சா வளர்ப்பு
இதனால் பயந்துபோன அந்த பெண் இதுகுறித்து தனது சகோதரியிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கணவரின் கொடுமைகளை தாங்க முடியாத அவர், தனது கணவர் மீது சம்பிகேஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவர் கஞ்சாவிற்கு அடிமையானவர் எனவும், அவர் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாகவும் கூறினார்.
மேலும், அவர் தன்னை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்து தனது சகோதரியையும் ஆசைக்கு இணங்க கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜான்பால், அவரது நண்பர்கள் சஜீஸ், நஜி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.