ஜி.எஸ்.டி.யை ஆதரித்தது எங்களின் தவறு - மம்தா பானர்ஜி
ஜி.எஸ்.டி. சட்ட மசோதா நிறைவேற்றத்துக்கு ஆதரவு அளித்தது எங்களின் தவறு. மத்திய அரசோ அனைத்து வரிகளையும் வசூலித்துக்கொண்டு, எங்களுக்கு உரிய பங்கை தருவதில்லை என மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில் கிராமப்புறங்களில் சாலை அமைப்பதற்கான திட்டத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'ஜி.எஸ்.டி. சட்ட மசோதா நிறைவேற்றத்துக்கு ஆதரவு அளித்தது எங்களின் தவறு. அது மாநிலங்களுக்கு பயனளிக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் மத்திய அரசோ அனைத்து வரிகளையும் வசூலித்துக்கொண்டு, எங்களுக்கு உரிய பங்கை தருவதில்லை.
மேலும், 100 நாள் வேலை திட்டம், ஓ.பி.சி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவியையும் மத்திய அரசு நிறுத்திவிட்டது.'
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்காளத்தின் மீதான மத்திய அரசின் பாகுபாட்டை கண்டித்து நாளை (புதன்கிழமை) கொல்கத்தாவில் 2 நாள் தர்ணா போராட்டத்தை தொடங்கவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
Related Tags :
Next Story