இஸ்ரேல் போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை 5% அதிகரிப்பு


இஸ்ரேல் போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை 5% அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2023 8:59 AM IST (Updated: 9 Oct 2023 11:13 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதலை தொடங்கினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்றும் 3ம் நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் அக்.6ஆம் தேதி 84.58 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று 89 டாலராக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 More update

Next Story