கட்டுமான பணி: இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் வரவுள்ளதாக இஸ்ரேல் தகவல்


கட்டுமான பணி: இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் வரவுள்ளதாக இஸ்ரேல் தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 12 April 2024 5:41 AM IST (Updated: 12 April 2024 5:42 AM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்அவிவ்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போர் காரணமாக இஸ்ரேலில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் அங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறுகிய காலத்தில் கட்டுமானத் துறைக்காக அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வருகிறார்கள். பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் கட்டுமான மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் கூட்டு நிதியின் மூலம் கட்டுமான தொழிலாளர்கள் வாடகை விமானங்கள் மூலம் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்துவரப்பட உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story