'ஒற்றுமை யாத்திரை நடத்துவதற்கு இந்தியா உடைந்து இருக்கிறதா?' - ராஜ்நாத் சிங் விமர்சனம்


ஒற்றுமை யாத்திரை நடத்துவதற்கு இந்தியா உடைந்து இருக்கிறதா? - ராஜ்நாத் சிங் விமர்சனம்
x

இந்தியாவை யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடும் காலம் கடந்துவிட்டது என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த யாத்திரை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைக் கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கூறியதாவது;-

"இந்தியாவில் வெற்றுப்புணர்வு மேலோங்கி இருக்கிறது என்று சிலர் கூறுவது நாட்டை இழிவுபடுத்தும் செயல். நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தும் ராகுல் காந்திக்கு நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவர்கள் நம் நாட்டின் வீரர்களின் வீரத்தை துணிவை கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். இந்தியாவை ஒரு அரசியல் கட்சி ஒற்றுமைப்படுத்துவதற்கு நாடு என்ன உடைந்தா இருக்கிறதா?

1947ல் இந்தியா பிரிவினையை சந்தித்துவிட்டது. இனி இந்தியா ஒருபோதும் உடையாது. இந்தியாவை யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடும் காலம் கடந்துவிட்டது.

இந்தியாவின் பெருமிதத்திற்கு குறை வரக்கூடாது. அதனால் ராகுல் காந்தி இந்தியாவின் பிம்பத்தை சிதைக்காமல் இருந்தால் போதும். அரசியல் என்பது அரசாங்கம் அமைப்பதற்கு மட்டுமல்ல நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கும் தான்."

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story