புரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறை: நாளை மீண்டும் திறப்பு


புரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறை:  நாளை மீண்டும் திறப்பு
x

கோப்புப்படம்

புரி ஜெகநாதர் கோவில் கடந்த 14-ந்தேதி கருவூலங்கள் திறக்கப்பட்டு, அங்கிருந்த நகைகள் மதிப்பிடப்பட்டன.

புரி,

ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவிலில், ரத்ன பண்டார் என்ற ரகசிய கருவூல அறையில் கோவிலுக்கு சொந்தமான நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 2 ரகசிய அறைகள் கோவிலில் உள்ளன. இவை கடைசியாக 46 ஆண்டுகளுக்கு முன்பாக 1978-ல் திறக்கப்பட்டன.

தற்போது இந்த ரகசிய கருவூலத்தில் உள்ள நகைகள் உள்ளிட்ட பொருட்களை டிஜிட்டல் ஆவணமாக வகைப்படுத்துவதற்காக திறக்க முடிவு செய்யப்பட்டு, நீதிபதி தலைமையில் 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவின் முடிவின்படி, கடந்த 14-ந்தேதி கருவூலங்கள் திறக்கப்பட்டன. அதில் இருந்த நகைகள் மதிப்பிடப்பட்டன. சுமார் 120 கிலோவுக்கு மேற்பட்ட தங்க ஆபரணங்களும் மற்றும் ஏராளமான வெள்ளி பொருட்களும் இருப்பதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன.

இந்த நிலையில் இந்த ஆபரண கருவூலங்கள் நாளை (வியாழக்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளது. காலை 9.51 மணிக்கு திறக்கப்பட்டு, பகல் 12.15 மணி வரை ஆபரண பொருட்கள் பட்டியலிடப்படும். அதற்கு வசதியாக கோவிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கருவூலத்திற்கு அவை தகுந்த பாதுகாப்புடன் மாற்றப்படுவதாக குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story