உள்கட்டமைப்பு, பொருளாதார வழித்தட முதலீடு... ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பேச்சு


உள்கட்டமைப்பு, பொருளாதார வழித்தட முதலீடு... ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பேச்சு
x
தினத்தந்தி 9 Sept 2023 6:45 PM IST (Updated: 9 Sept 2023 9:52 PM IST)
t-max-icont-min-icon

நீடித்த, உறுதியான உள்கட்டமைப்புக்கான அவசியம் குறித்து ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, உண்மையில் இது ஒரு பெரிய விசயம். பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்பதே இந்த ஜி-20 உச்சி மாநாட்டின் மைய விசயம் மற்றும் பல வழிகளில், இன்று நாம் பேசி கொண்டிருக்கும் நட்புறவுக்கான மையமும் கூட.

நீடித்த, உறுதியான உள்கட்டமைப்பு, தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை உருவாக்குவது மற்றும் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு, இந்த தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த நாம் ஒன்றிணைந்தோம். இதனை உண்மையான ஒன்றாக உருவாக்க, அமெரிக்கா மற்றும் எங்களுடைய நட்பு நாடுகள் எப்படி பணியாற்றுகின்றன? என்பதற்கான முக்கிய வழிகளை சுட்டிக்காட்ட இன்று நான் விரும்புகிறேன் என பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், 'பொருளாதார வழித்தடம்' இந்த சொற்றொடரை பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீங்கள் கேட்க போகிறீர்கள். அடுத்த தசாப்தத்திற்கும் கூட நீங்கள் இதனை கேட்க முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.

குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் இடையேயான உள்கட்டமைப்பு இடைவெளியை பற்றி பேசுவதற்காக நாம் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

நம்முடைய முதலீடுகளின் தாக்கங்களை நாம் விரிவுப்படுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அதனாலேயே பொருளாதார வழித்தடங்களில் முதலீடு மேற்கொள்ள, அமெரிக்கா தன்னுடைய நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என சில மாதங்களுக்கு முன்பு நான் அறிவிப்பு வெளியிட்டேன் என்று பைடன் பேசியுள்ளார்.


Next Story