நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு


நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு
x

தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருவது இண்டிகோ நிறுவனம். இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு சர்வதேச விமானங்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது.

இந்த சூழலில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ எக்ஸ் வலைதள பக்க பதிவில், "தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, எங்களது பயணிகள் விமான நிலையங்களில் செக்-இன் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். பயணிகளுக்கு உதவுவதற்காக எங்களது நிறுவன பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் முடிந்தவரை தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்புநிலைக்கு திரும்புவதற்காக பணியாற்றி வருகிறோம்" என விளக்கம் அளித்துள்ளது.


Next Story