'இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து; பா.ஜ.க. அரசுக்கு அவமானம்' - மஹுவா மொய்த்ரா எம்.பி. விமர்சனம்


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து; பா.ஜ.க. அரசுக்கு அவமானம் - மஹுவா மொய்த்ரா எம்.பி. விமர்சனம்
x

மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எம்.பி. விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு ரத்து செய்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது பா.ஜ.க. அரசிற்கு அவமானம் என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எம்.பி. விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

"தேர்தலை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் உலக மல்யுத்த கூட்டமைப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்திய மல்யுத்த வீரர்கள் நமது கொடியின் கீழ் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விளையாட்டுத்துறையை ஒரு பாலியல் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி. வீழ்ச்சியடையச் செய்வதற்கு அனுமதித்த பா.ஜ.க. அரசுக்கும், இளைஞர் நலத்துறைக்கும் அவமானம்" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story