55 மணி நேரம் மாரத்தான் பஞ்ச்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய தற்காப்பு கலைஞர்
சித்து ஷேத்ரி இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஒரு காலை மட்டும் பயன்படுத்தி மூன்று நிமிடங்களில் 620 முறை உதைத்து சாதனை படைத்தார்.
இந்தியாவைச் சேர்ந்த தற்காப்பு கலைஞர் சித்து ஷேத்ரி (வயது 42), குத்துச்சண்டை பயிற்சியில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது, குத்துச்சண்டை பயிற்சிக்கான பஞ்சிங் பேக்கில் 55 மணி நேரம் 15 நிமிடங்கள் இடைவிடாமல் குத்தி சாதனை படைத்தார். இது முந்தைய சாதனையை விட 5 நிமிடம் அதிகம் ஆகும்.
இந்த மாரத்தான் சாதனை முயற்சியின்போது, இரண்டு வினாடிக்கு ஒரு பஞ்ச் என்ற அளவில் அவர் குத்துவிட்டுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடங்கள் ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டது.
தற்காப்பு கலையில் ஷேத்ரி சாதனை படைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஒரு காலை மட்டும் பயன்படுத்தி மூன்று நிமிடங்களில் 620 முறை உதைத்து (கிக்) சாதனை படைத்தார். 2011ல் ஒரு நிமிடத்தில் 168 முறை உதைத்து சாதனை படைத்தார்.
Related Tags :
Next Story