140 கோடி இந்தியர்களின் பெருமைக்கான அடையாளம் இந்திய ராணுவம்: யோகி ஆதித்யநாத்


140 கோடி இந்தியர்களின் பெருமைக்கான அடையாளம் இந்திய ராணுவம்:  யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 10 Feb 2024 6:59 AM IST (Updated: 10 Feb 2024 7:02 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை சுயநலமின்றி செயல்பட்டு வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர் என உத்தர பிரதேச முதல்-மந்திரி பேசியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் நடந்த கிரந்தி சவுரியா சமரோ என்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்திய ராணுவம் பெருமைமிக்க வரலாறு கொண்டது. போர்க்காலம் மற்றும் அமைதியான காலத்தின்போதும் நாட்டுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது மற்றும் சேவையாற்றுவதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை, சவாலான சூழலின்போதும் மற்றும் தொலைதூர பகுதியில் இருந்தபோதும் கூட சுயநலமின்றி செயல்பட்டு பாதுகாத்து வருகின்றனர் என வலியுறுத்தி கூறிய அவர், இந்திய வீரர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், வீரர்களின் பாராட்டும்படியான செயல்பாடுகள், குழந்தைகள் நடத்திய கராத்தே மற்றும் கலாசார நிகழ்ச்சிகளையும் கண்டு களித்துள்ளார்.


Next Story