4-வது தொழில் புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் - மத்திய கல்வி மந்திரி உறுதி


4-வது தொழில் புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் - மத்திய கல்வி மந்திரி உறுதி
x

கோப்புப்படம்

4-வது தொழில் புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் பல்வேறு திட்டங்களை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர், 4-வது தொழில்புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இந்தியா வெறும் நுகர்வு நாடாக மட்டும் இருக்க முடியாது. தன்னிறைவை அடைவதற்கும், உலகளாவிய நலனை மேம்படுத்துவதற்கும் நாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, சொந்த மாதிரிகளை நிறுவ வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

தேசிய கல்விக்கொள்கை 2020 என்பது புதிய வளர்ந்து வரும் உலக ஒழுங்கில் இந்தியாவை முதலிடத்தில் வைப்பதற்கான ஒரு வரைபடம் என்று கூறிய தர்மேந்திர பிரதான், இது கல்வி அமைப்பில் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பதை வலியுறுத்துவதாகவும், திறன் வளர்ப்பு என்பது வாழ்நாள் செயல்முறை என்றும் தெரிவித்தார். தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Next Story