உலக புதுமை குறியீடு தரவரிசையில் 40-வது இடத்தில் இந்தியா
உலக புதுமை குறியீடு தரவரிசையில் இந்தியா தனது 40-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
புதுடெல்லி,
ஜெனீவாவில் உள்ள உலக அறிவுசார் சொத்து அமைப்பு. ஆண்டுதோறும் உலக அளவில் புதுமை குறியீட்டு எண் தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 132 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா தனது 40-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் 40-வது இடத்தில்தான் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு 81-வது இடத்தில் இருந்த இந்தியா, தொடர்ந்து முன்னேறி, 40-வது இடத்தை அடைந்திருப்பதாக 'நிதி ஆயோக்' தெரிவித்துள்ளது. அறிவு சார் மூலதனம், துடிப்பான ஸ்டார்ட்அப் திட்டம், பொது, தனியார் ஆராய்ச்சி அமைப்புகளின் பணிகள் ஆகியவற்றால் இடம் தக்க வைக்கப்பட்டதாக கூறியுள்ளது.
Related Tags :
Next Story