உலகில் அதிக குறைபிரசவம் கொண்ட நாடு இந்தியா- ஆய்வில் தகவல்


உலகில் அதிக குறைபிரசவம் கொண்ட நாடு இந்தியா- ஆய்வில் தகவல்
x

2020-ம் ஆண்டு உலகில் குறைபிரசவம் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருந்துள்ளது. இந்த தகவலை ‘லான்செட்’ ஆய்வுக்குழுவினர் ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் ஒரு கோடியே 34 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 10 லட்சம் குழந்தைகள் இறந்து விட்டன. குறைபிரசவங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்திருந்தது தெரியவந்துள்ளது. உலக குறைபிரசவத்தில் இது 20 சதவீதம் ஆகும்.

இந்தியாவைத் தொடர்ந்து குறைபிரசவத்தில் பாகிஸ்தான், நைஜீரியா, சீனா, எத்தியோப்பியா, வங்காளதேசம், காங்கோ குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. உலக குறைபிரசவத்தில் இந்த 8 நாடுகளிலும் 50 சதவீத பிறப்புகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story