பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை - அமெரிக்காவிடம் ராஜ்நாத்சிங் கவலை


பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை - அமெரிக்காவிடம் ராஜ்நாத்சிங் கவலை
x

கோப்புப்படம்

பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்காவிடம் ராஜ்நாத்சிங் கவலை தெரிவித்தார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்களுக்கு தேவையான 45 கோடி டாலர் மதிப்புள்ள உதிரிபாகங்களை விற்பனை செய்ய அமெரிக்கா சமீபத்தில் முடிவு செய்தது.

இந்தநிலையில், அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பதற்கு இந்தியாவின் கவலையை தெரிவித்தார்.

மேலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.


Next Story