அயோத்தி ராமர் கோவிலுக்கு 22ம் தேதிக்கு பிறகு தான் செல்வேன் - ஜே.பி. நட்டா பதிவால் பரபரப்பு


அயோத்தி ராமர் கோவிலுக்கு 22ம் தேதிக்கு பிறகு தான் செல்வேன் - ஜே.பி. நட்டா பதிவால் பரபரப்பு
x

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த 15-ந்தேதி நிறைவடைந்தது. அதன்பின் ஜனவரி 16-ந்தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஜனவரி 22 அன்று, புது டெல்லி ஜாண்டேவாலன் கோவிலில் இருந்து கும்பாபிஷேக விழாவைக் காணவிருக்கிறேன் என்றும், 22ஆம் தேதிக்குப் பிறகு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வேன் எனவும் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் புனித நிகழ்ச்சிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பிற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்படும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி முடிந்ததும், எனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்காக விரைவில் அயோத்திக்குச் செல்வேன். ஜனவரி 22 அன்று, புது டெல்லி ஜாண்டேவாலன் கோவில் முற்றத்தில் இருந்து கும்பாபிஷேக விழாவைக் காணவிருக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story