ஆர்டர் செய்த மீன் பிரியாணியில் பல்லியின் வால்? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை


ஆர்டர் செய்த மீன் பிரியாணியில் பல்லியின் வால்? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 1 Jan 2024 5:27 PM IST (Updated: 1 Jan 2024 5:52 PM IST)
t-max-icont-min-icon

சோசியல் மீடியாவை திறந்தாலே தினமும் இதுபோன்ற புகார்களை சொல்லும் பல வீடியோக்களை பார்க்கலாம்.

ஐதராபாத்,

எத்தனை நாள் தான் வீட்டு உணவையே சாப்பிடுவது. ஒருநாளாவது ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவோமே என நினைப்பவர்களுக்கு உணவோடு சேர்த்து கூடுதல் போனஸாக பூச்சிகளும், விலங்குகளும் கிடைக்கின்றன. இதை வாசிப்பதற்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் ஹோட்டல் உணவுகளில் கரப்பான் பூச்சிகளும் பல்லிகளும், சில சமயங்களில் எலிகளும் கூட இருப்பதை அதிகமாக பார்க்க முடிகிறது. சோசியல் மீடியாவை திறந்தாலே தினமும் இதுபோன்ற புகார்களை சொல்லும் பல வீடியோக்களை பார்க்கலாம்.

இந்தநிலையில், ஐதராபாத்தில் உள்ள டெக்கான் எலைட் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட மீன் பிரியாணியில் பல்லியின் வால் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. உணவகத்தின் உரிமையாளர் ஒருவர், இது பல்லியின் வால் அல்ல, அது ஒரு வகை மீன் என்று கூறினார்.

இதற்கிடையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், டெக்கான் எலைட் உணவுகத்திற்கு சென்று பிரியாணியின் மாதிரிகளைச் சேகரித்தனர். ஹோட்டல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உணவை ஆர்டர் செய்த நபர் வலியுறுத்தி உள்ளார். மேலும் பிரியாணி சாப்பிட்ட 8 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள மெரிடியன் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.


Next Story