பொது சிவில் சட்டத்தால் இந்துக்கள் பயனடைய மாட்டார்கள்: மம்தா பானர்ஜி
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என மம்தா பானர்ஜி பேசினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபுர் மக்களவை தொகுதியில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் ஒரு விசயத்தை பயன்படுத்துவார்கள். இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை எடுத்துள்ளார்கள். அது குறித்து பரப்புரை செய்கிறார்கள். இதனால் இந்துக்கள் எந்த வகையிலும் பயனடைய மாட்டார்கள்.
முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக சொல்லலாம். மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். பா.ஜனதாவுக்கு பயம் மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது காவி முகாம் தோற்கடிக்கப்பட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story