ஒவ்வொரு இந்திய மொழியுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது - அமித்ஷா


ஒவ்வொரு இந்திய மொழியுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது - அமித்ஷா
x

அனைத்து இந்திய மொழிகளும் நமது பெருமை மற்றும் நமது பாரம்பரியம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி இந்தி திவாஸ் தினம் (இந்தி மொழி தினம்) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

"நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள். அனைத்து இந்திய மொழிகளும் நமது பெருமை மற்றும் நமது பாரம்பரியம். அவற்றை வளப்படுத்தாமல் நாடு முன்னேற முடியாது. அலுவல் மொழி இந்தி ஒவ்வொரு இந்திய மொழியுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, இந்தி மொழி நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாக எடுத்துக்கொள்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story