"விரைவில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அகற்றம்" - மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்


விரைவில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அகற்றம் - மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்
x
தினத்தந்தி 25 March 2023 9:18 PM IST (Updated: 25 March 2023 9:57 PM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், நெடுஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவும், அவற்றிற்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆறு மாதங்களுக்குள் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் கூறினார்.

'பாஸ்ட் டாக்' அறிமுகம் செய்த பிறகு சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களில் இருந்து 47 வினாடிகளாக குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், நகரங்களை ஒட்டிய சுங்கச்சாவடிகளில் தற்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புதிய முறை அமல்படுத்த உள்ளதாக கூறினார்.




Next Story