5 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு - இந்திய வானிலை மையம் தகவல்


5 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு - இந்திய வானிலை மையம் தகவல்
x

மிக்ஜம் புயல் தற்போது ஜார்கண்ட் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய மிக்ஜம் புயல் தற்போது வலுவிழந்து, ஜார்கண்ட் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைக்கொண்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் வட இந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் இன்றும், நாளையும் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story