அரியானா தேர்தல் முடிவு: சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் முன்னிலை


அரியானா தேர்தல் முடிவு: சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் முன்னிலை
x

சாவித்ரி ஜிண்டால் குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டிகார்,

அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. எனினும், இந்த தேர்தலில் வெற்றியை பெற காங்கிரசும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஹிசார் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் 5வது சுற்றில் 21,113 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் 13,725 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 7,388 ஆகும்.

அதேபோல பாஜக வேட்பாளராக களம் கண்டுள்ள அரியானாவின் மந்திரியும் ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமல் குப்தா 7,269 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றுள்ளார். சாவித்ரி ஜிண்டால் குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story