மக்கள் பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம்- போலீசார் எச்சரிக்கை


மக்கள் பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம்- போலீசார் எச்சரிக்கை
x

Image Courtesy: AFP 

ஸ்மார்ட்போன் பயனர்கள் பொது இடங்களில் போனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

புவனேஸ்வர்,

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயனர்கள் பொது இடங்களில் போனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிசா போலீசார் எச்சரித்துள்ளனர். பொது மக்கள் வெளியில் பயணம் செய்யும் போது பொது இடங்களில் உள்ள சார்ஜிங் பாய்ண்ட்களில் போனை சார்ஜ் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் செல்போன் சார்ஜிங் ஸ்டேஷன், யூ.எஸ்.பி பவர் ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்வதால் சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மக்கள் போனில் இருந்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சிக்கலாம் என ஒடிசா போலீசார் தெரிவித்து உள்ளனர்.

யூ.எஸ்.பி சார்ஜிங் கனெக்டர்கள் மூலம் ஹேக்கர்கள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் "மால்வேரை"ச் (கணினி வைரஸ்) புகுத்த முடியும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் மொபைலில் உள்ள தரவுகள் திருடப்படுவது மட்டுமின்றி புதிய வைரஸ்களும் மொபைலை தாக்கும் அபாயம் உள்ளது.



Next Story