குஜராத்தில் 8 மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு
குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பல்வேறு வழக்குகளில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளன.
அகமதாபாத்,
குஜராத் மாநில விசாரணை நீதிமன்றங்களில் 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளில் 46 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீா்ப்புகள் வெளியாகி உள்ளன.
2002 அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 56 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடா்புடைய குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தீா்ப்பளித்தது.
மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள நீதிமன்றங்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கொலை வழக்குகளில் போக்ஸோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வழங்கியுள்ளன. ஆணவக் கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் 46 பேருக்கு மட்டுமே தூக்குதண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2021-ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.
பல்வேறு நகரங்களில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள், பாலியல் குற்றங்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சிறார்களை கற்பழித்து கொலை செய்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.