அசுர வெற்றி: குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக...!
குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பாஜக வெற்றிபெற்றுள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது.
ஒவ்வொரு சுற்று முடிவிலும் பாஜக வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கான வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், குஜராத்தில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை கடந்து பாஜக அரசு வெற்றி உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் 22 தொகுதிகள், ஆம் ஆத்மி 6, சுயேட்சைகள் 3, சமாஜ்வாதி 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளது.
முழு விவரங்களுக்கு மேலும் படிக்க... லைவ் அப்டேட்ஸ்: அசுர பலத்துடன் குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக