குஜராத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா
பயானியின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார் என்று குஜராத் சட்டசபை செயலாளர் டிஎம் படேல் தெரிவித்தார்.
காந்தி நகர்,
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் 156 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்தது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றிப்பெற்றது. இதில் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பூபேந்திர பயானி வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ வாக தேர்வானார்.
இந்நிலையில், பூபேந்திர பயானி தனது எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். இன்று காலை குஜராத் சட்டசபை சபாநாயகர் சங்கர் சவுத்ரியை சந்தித்த பூபேந்திர பயானி தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். இதையடுத்து பயானியின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார் என்று குஜராத் சட்டசபை செயலாளர் டிஎம் படேல் தெரிவித்தார்.
Related Tags :
Next Story