உலக பணக்காரர்கள் பட்டியல் : 4-வது இடத்தில் கவுதம் அதானி - பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளினார்
இந்த பட்டியலில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
வாஷிங்டன்,
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு உள்ள உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த வாரம் பில் கேட்ஸ் தனது சொத்துக்களில் 20 பில்லியன் டாலர்களை அறக்கட்டளை நிறுவனமான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, கவுதம் அதானி மற்றும் குடும்பம், போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பில் கேட்ஸ் 5-வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் 230 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். பெர்னால்ட் அர்னால்டு இரண்டாவது இடத்திலும், அமேசானின் ஜெப் பெசோஸ் 3வது இடத்திலும் உள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார்.
எரிவாயு, மின்சாரம், துறைமுகம் போன்ற பல துறைகளில் அதானியின் நிறுவனம் கடந்த சில மாதங்களில் அதிக கவனம் செலுத்தி வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.