ஜி-20 உச்சி மாநாடு; இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்து இருதரப்பு ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
டெல்லியில் பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. சர்வதேச விவகாரங்களில் தீர்வு காண்பதற்கான வழிகளை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை, பிரதமர் மோடி இன்று சந்தித்து இருதரப்பு ஆலோசனை நடத்தினார். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கு ஆதரவு அளித்ததற்காகவும் மற்றும் உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டணியில் இத்தாலி இணைந்ததற்காகவும் மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான பொருளாதார வழித்தடத்திற்கான ஆதரவுக்காகவும் பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.