140 கோடி மக்களின் நோக்கங்களை நிறைவேற்றி... உலக நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கிறோம்: பிரதமர் மோடி


140 கோடி மக்களின் நோக்கங்களை நிறைவேற்றி... உலக நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கிறோம்:  பிரதமர் மோடி
x

ஜனநாயகத்தின் ஒரு பழைமையான மற்றும் உடைபடாத கலாசாரம் ஆகியவற்றை இந்தியா கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

தென்கொரியாவின் சியோல் நகரில் ஜனநாயகத்திற்கான 3-வது உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாற்றினார். இந்த உச்சி மாநாடானது, உலகம் முழுவதுமுள்ள ஜனநாயகங்கள் தங்களுடைய அனுபவங்களை பரிமாறி கொள்ளவும் மற்றும் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கற்று கொள்வதற்காகவும் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தளம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, ஜனநாயகத்தின் ஒரு பழைமையான மற்றும் உடைபடாத கலாசாரம் ஆகியவற்றை இந்தியா கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் சில வாரங்களில், ஜனநாயகத்தின் பெரிய திருவிழாவை இந்த உலகம் காண இருக்கிறது. ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கையை மக்கள் மீண்டுமொரு முறை உறுதி செய்வார்கள் என்று கூறினார். நூறு கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதகுல வரலாற்றில் மிக பெரிய தேர்தல் நடைமுறையாக இது இருக்கும்.

இதில், இந்தியா தன்னுடைய 140 கோடி மக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதுடன் மட்டும் நில்லாமல், ஜனநாயகத்திற்கான உறுதிமொழி நிறைவேற்றப்படுகிறது மற்றும் அதிகாரம் பெறுகிறது என்று உலக நாடுகளுக்கும் நம்பிக்கையை அளிக்கிறது என்று பேசியுள்ளார்.

கடந்த தசாப்தத்தில், கூட்டு முயற்சிகளால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மந்திரம் இந்தியாவை முன்னோக்கி நடத்தி சென்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான மாற்றத்திற்கு 14 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகள் அடிமட்ட அளவில் இருந்து நம்முடைய ஏஜெண்டுகளாக செயல்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story