டெல்லியில் டாக்டர்கள் தொடர் போராட்டம்: நோயாளிகள் அவதி


டெல்லியில் டாக்டர்கள் தொடர் போராட்டம்: நோயாளிகள் அவதி
x

பெண் டாக்டர் படுகொலைக்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

புதுடெல்லி,

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி என்ற அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு ஒரு பெண் டாக்டர் கடந்த 9-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையை சி.பி.ஐ.யிடம் கொல்கத்தா ஐகோர்ட்டு ஒப்படைத்தது. கடந்த 14-ந் தேதி நள்ளிரவு, ஒரு மர்ம கும்பல் புகுந்து ஆஸ்பத்திரியை சூறையாடியது. இதற்கிடையே, பெண் டாக்டர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்களின் 24 மணி நேர போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்தது. நேற்றுமுன்தினம் காலையில் இருந்து நேற்று காலைவரை போராட்டம் நடந்தது.

இதனிடையே, பெண் டாக்டர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெல்லியில் டாக்டர்கள் இன்று 8-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த டாக்டர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர். பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படவில்லை, மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால் மக்கள் அவதி அடைந்தனர்.


Next Story