மருத்துவ மாணவர் பெயரில் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று மோசடி


மருத்துவ மாணவர் பெயரில் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று மோசடி
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ மாணவர் பெயரில் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.

எலகங்கா:

பெங்களூரு எலகங்காவை சேர்ந்தவர் சதீஷ் சங்கர் (வயது 52). இவரது மகன் சுஸ்மா. இவர் ரஷியாவில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சுஸ்மா கல்லூரி கட்டணம் செலுத்த சதீஷ் சங்கர், பீனியாவில் உள்ள தனியார் வங்கியில் ஏஜென்டு ஒருவர் உதவியுடன் ரூ.6 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே சுஸ்மா மருத்துவ படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பினார். இந்த நிலையில் சதீஷ் சங்கர் வீட்டுக்கு வங்கி அதிகாரி ஒருவர் வந்தார். அப்போது வங்கியில் வங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவில்லை என கூறினார். இதனால் சதீஷ் சங்கர் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது தான் சுஸ்மா பெயரிலான ஆவணங்களை கொண்டு மர்மநபர்கள் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தது தெரிந்தது. இதுகுறித்து சதீஷ் சங்கர் எலகங்கா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story