குடும்ப பிரச்சனையில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ


x

புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வீட்டில் இருந்து வெளியே வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, தூக்கிட்ட நிலையில் இறந்துள்ளார். இது குறித்து, தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக நடராஜனின் பிள்ளைகள் சொத்தை பிரித்துக் கொண்டு சென்று விட்டதாகவும், கடந்த சில தினங்களாகவே அவர் வீட்டில் தனியாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

1 More update

Next Story