முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய தடை


முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய தடை
x

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.. இந்த உத்தரவை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராஜேஸ்தாசின் இந்த கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஸ் தாஸ் மேல் முறையீடு செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.


Next Story