ஆந்திராவில் இரண்டு சம்பவங்கள் - நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி


ஆந்திராவில் இரண்டு சம்பவங்கள் - நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 12 Feb 2024 11:15 AM IST (Updated: 12 Feb 2024 11:17 AM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

விஜயவாடா,

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஏ.எஸ்.ஆர் மாவட்டத்தின் ஐ.போலவரம் கிராமத்தில் உள்ள சீதாபள்ளி ஓடைக்கு சில பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்களில் 3 பேர் குளிப்பதற்காக ஓடையில் இறங்கியபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள ராமச்சோடவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்கள் கோதாவரம் மண்டலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் அர்ஜுன் (வயது 16), ஆண்டிபோயின தேவி சார்ன் (வயது 16) மற்றும் லவேதி ராமன்(வயது 16) என அடையாளம் தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து, எலுரு மாவட்டத்தில் உள்ள சாரிபள்ளி கிராமத்தில் 2 சிறுவர்கள் தவறுதலாக வயலில் உள்ள தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி அருகில் இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் உயிரிழந்த சிறுவர்கள் சந்து (வயது 17) மற்றும் கோட்டா ககன் சந்தேஷ் (வயது 12) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story